– நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

நுவரெலியா மாநகர சபைக்கு இருபத்து ஜந்து கோடியே நாற்பத்து ஏழு இலட்சத்து என்பத்து ஆறாயிரத்து எழுநூறு ரூபா (25 47 86 700)வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


1980 ஆம் அண்டு முதல் கடந்த 40 வருடங்களாக குத்தகை பணத்தின் மிகுதி அறவிடப்படவில்லை. அதற்கான பொறுப்பை மாநகர சபையில் சேவையாற்றிய மாநகர ஆணையாளர் மாநகர கணக்காளர் வருமான பரிசோதகர்கள் கூட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதிகாரிகள் தங்களுடைய கடமையில் இருந்து தவறியுள்ளமையால் அவர்களிடம் குறித்த தொகையை அறவிடுவதற்கு குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணக்காய்வை மேற்கொண்ட குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் வர்த்தக நிலையங்களையும் கடைகளையும் வாடகைக்கு வழங்குகின்ற பொழுது அது தொடர்பாக பின்பற்ற வேண்டிய சில சட்ட நடைமுறைகள் இருக்கின்றன.

N Eliya 2

ஆனால் இந்தச் சட்ட திட்டங்கள் எதனையும் பொருட்டாகக் எடுக்காது உள்ளூராட்சி மன்றங்கள் செயல்படுவதை நாம் அறிவோம். இதற்குள் ஒரு அரசியல் செயல்படுவதையும் நாம் தெரிந்து இருக்கின்றோம்.

தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் நடத்தப்பட்ட கணக்காய்வில் நுவரெலியா மாநகர சபையும் கணக்காய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பில் சட்டதிட்டங்களுக்கு அப்பால் சென்று செயல்பட்டிருப்பது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டுள்ள இலக்கம் 1980ஃ46 இலக்கத்தை கொண்ட சுற்றறிக்கையின்படி வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்க முடியும்.

மதிப்பிடப்படுகின்ற மாதாந்த வாடகை தொகையானது 5 வருடங்களுக்கு ஒரு முறை மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

அந்த வகையில் மாநகர சபைக்கு சொந்தமான 463 கடைத்தொகுதிகளுக்கும் கடைசியாக 2009 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டாலும் அது 2020 ஆண்டு வரை நடைமுறைபடுத்தப்படவில்லை.

குத்தகையாளர்களின் எதிர்ப்பின் காரணமாக 2009 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட தொகையை 2012.01.01 முதல் நடைமுறைபடுத்துவது என 2011.11.31 அன்று மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைபடுத்தாமல் 2003 ஆம் ஆண்டு குத்தகை மேலதிகமாக 25 சதவீதம் அதிகரித்து 2012.02.04 முதல் அந்த தொகையை அறவிட தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானிக்கப்பட்ட இந்த தொகை தொடர்பாக முறையான எந்த ஒரு ஆவணமோ சாட்சியமோ கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. மதிப்பீட்டு அறிக்கைகளின்படி 2003 ஆம் ஆண்டு முதல் வர்த்தக நிலையங்களுக்கான குத்தகை அறவிடப்படாமையின் காரணமாக நுவரெலியா மாநகர சபைக்கு இருபத்து ஜந்து கோடியே நாற்பத்து ஏழு இலட்சத்து என்பத்து ஆறாயிரத்து எழுநூறு ரூபா (25 47 86 700) இழப்பு ஏற்பட்டுள்ளது.

2010 நவம்பர் மாதம் 10 திகதியிடப்பட்ட CLP/NE/B/NEMC/2010/46 மற்றும் 2010 நவம்பர் மாதம் 10 திகதியிடப்பட்ட கணக்காய்வின்படி நுவரெலியா மாநகர சபையின் பிரதான மதிப்பீட்டாளர் 2003 பெப்ரவரி 27 திகதியிடப்பட்ட இலக்கம் NE/RP/631 மதிப்பீட்டின் பிரகாரம் குத்தகை அறவிடாத வகையில் 2008 ஆண்டு வரை நகரசபைக்கு கிடைக்க வேண்டிய தொகையான ஒரு கோடியே ஜம்பத்து மூன்று இலட்சத்து நாற்பத்து மூவாயிரத்து இருநூறு (1 53 43 200) ரூபா கிடைக்காமல் போயுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

N Eliya 3

அதேபோல மத்திய மாகாண மதிப்பீட்டாளர் 2019 ஆகஸ்ட் மாதம் 21 திகதியிடப்பட்ட இலக்கம் NE/RP/897 மதிப்பீட்டு அறிக்கையின்படி 2010 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மதிப்பீட்டு தொகையை அறிவிடப்பட வேண்டும் ஆனாலும் அதனையும் இதுவரையில் அறவிடப்படாமையின் காரணமாக 2009 முதல் 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய இருபத்து மூன்று கோடியே தொன்னூற்று நான்கு இலட்சத்து நாற்பத்து மூவாயிரத்து ஜந்நூறு ரூபாய் (23 94 43 500) கிடைக்காமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

(ஆ) 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி புதிய குத்தகை அறிவிடுவது தொடர்பாகு ஏற்பட்ட விரோதம் காரணமாக மத்திய மாகாண ஆளுநரின் 3/2/35 மற்றும் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியிடப்பட்ட கடிதங்களின்படி மாநகர சபை முன்வைக்கின்ற புதிய குத்தகை தொடர்பாக வினவப்பட்டுள்ளது.இது தொடர்பாக தங்களுடைய CPC/NE/MC/MR/L 2009/30 மற்றும் 2012 பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின்படி தாங்கள் பதில் வழங்கியிருந்தாலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களையும் 9 வருடங்களாக நடைமுறைபடுத்தாமல் இருந்துள்ளது.

மாநகர சபை விதிகளின்படி 171 (1) விதிப்படி அல்லது வேறு ஏதாவது எழுதப்பட்ட சட்டத்தின்படி மாநகர ஆணையாளருக்கு இருக்கின்ற அதிகாரங்களின்படியும் சபையின் முழுமையான சம்மதத்துடன் ஒரு கடிதத்தின் மூலமாக சபையில் கடமையாற்றுகின்ற அதிகாரி ஒருவருக்கு அதிகாரங்களை பாரப்படுத்த முடியும்.

சபையின் வருமானத்தை அறிவிடுவது தொடர்பான அதிகாரம் அல்லது பொறுப்பு மாநகர ஆணையாளர் மாநகர கணக்காளர் வருமான பரிசோதகர் ஆகியோரை சார்ந்தது.

முறையாக குத்தகை செலுத்தியவர்கள் 125 கடை உரிமையாளர்கள் மாத்திரமே.

ஏனையோருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டாலும் அவை உரியவர்களிடம் சென்றடையவில்லை வருவமான வரித்துறையிpனர் ஆணையாளரை ஏமாற்றியுள்ளதுடன் தங்களுடைய பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளனர்.

260கடை உரிமையளார்களின் முறையான ஆவணங்கள் பேணப்படவில்லை இவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய குத்தகை பணத்தை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த 40 வருடங்களாக குத்தகைகாரர்களின் முறையான ஆவணம் பேனப்படாமை தொடர்பில் 220 சந்தர்ப்பங்கள் ஆய்வின் பொழுது தெரியவந்துள்ளது. குத்தகை தொடர்பாக கணணி மயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை முறையாக பேனப்படாமை தெரியவந்துள்ளது. 57 கடை குத்தகை காரர்களின் அறவிட வேண்டிய தகவல்கள் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

2020 டிசம்பர 31 ஆம் திகதி வரை மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய மூன்று கோடியே இருபத்து இரண்டு இலட்சத்து பதின்மூன்றாயிரத்து நூற்று அறுபத்து நான்கு ரூபா (3 22 13 164) 5 வருடங்கள் முதல் 30 வருடங்களாக அறவிடப்படாமல் இருக்கின்றது இந்த தொகையானது 139 கடை உரிமையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக நுவரெலியா மாநகர சபையின் தகவல் அறியும் அதிகாரி மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பின்வரும் தகவல்களை நுவரெலியா மாநகர சபையின் பொறியியலாளர் கே.பி.ஏ.சேனாரத்ன வழங்கியுள்ளார்.

சிரேஸ்ட மதிப்பீட்டாளர் மதிப்பீட்டாளர் திணைக்களத்திற்கு நுவரெலியா மாநகர சபையால் அனுப்பி வைத்துள்ள 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 திகதியிடப்பட்ட கடிதத்தில் நுவரெலியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக தொகுதிகளுக்கும் புதிய மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபைக்கு நிலுiவாயக உள்ள குத்தகை தொகையை உடனடியாக செலுத்துமாறு 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பொது ஒலிபெருக்கி மூலமாக வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

N Eliya

தற்பொழுது நடைமுறையில் இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் வர்த்தமாணி அறிவித்தலின்படி வியாபார நிலையங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கணணிமயப்படுத்தலின் பொழுது விடுபட்டுள்ள கடைத் தொகுதிகள் தொடர்பான விடயங்களை மீள கணணிமயப்படுத்தித்தருமாறு அதனை முன்னெடுக்கின்ற நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக குறித்த செயற்பாடு தாமதமடைந்துள்ளது.

இருப்பிட குத்தகை இடைநிறுத்தல் தொடர்பாக வியாபார நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கொரோனா தொற்று காரணமாக குறித்த செயற்பாடு தாமதமடைந்துள்ளது.இது தொடர்பான நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.

வர்த்தக நிலையங்களின் குத்தகை பெயர் மாற்றம் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த கணக்காய்வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்பதே பொது மக்களின் கேள்வியாகும்.தற்பொழுது நுவரெலியா மாநகர சபையை ஜக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி