தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரை வாயை அடைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார ஊழியர்களின் தலைமைத்துவம் வலியுறுத்தியுள்ளது.

"சுகாதார நிபுணர்கள் தாக்கப்பட வேண்டும் என இந்த உறுப்பினர்கள் கூறினால், இதுபோன்ற முட்டாள்களை கட்டி வைக்குமாறு அரசாங்கத்தின் பொறுப்பானவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்."

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திஸ்ஸ குட்டியாராச்சி விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய, கொழும்பில் நேற்று (09) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

"அனுரகுமார திஸாநாயக்க முட்டை பூஜையை பெற்றுக்கொண்டார். அப்படித்தான் தோழர் விஜித ஹேரத் கற்கள் பூஜையை பெற்றுக்கொண்டார். எனவே, போராட்டம் நடத்துபவர்களுக்கு தடிகள் ஊடாக பூஜையை வழங்க வேண்டிய தருணம் இது என்பதை நாட்டு மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.” என செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

இரண்டு தொழிற்சங்கத் தலைவர்களான சமன் ரத்னபிரிய மற்றும் ரவி குமுதேஷ் மற்றும் வைத்தியர் செனல் பெர்னாண்டோ ஆகியோர் தற்போது அரசியல் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

தற்போதைய ஆட்சியில் வாழ முடியாத சூழலில் வாழும் மக்கள் தடிகளை ஏந்தியிருப்பது தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை தாக்குவதற்காக அல்ல அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள தாக்குவதற்காகவே என வலியுறுத்திய அரசாங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, மக்களிடமிருந்து மறைந்திருக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.

இவ்வாறான சாட்டையடிகளை பயன்படுத்தினால் தொழிற்சங்க ஒடுக்குமுறையை கையாண்டால் அதனை எதிர்கொள்ள தயார் என தெரிவித்த சமன் ரத்னப்பிரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துக்கள் சுகாதார நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பை நீடிக்கலாம் என ஜனாதிபதி மற்றும் பிரதமரை எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, தொழிற்சங்க நடவடிக்கையை அடக்குவதற்கு அரசியல் ரீதியாக காலாவதியான வழிமுறையை முன்னிறுத்துவதை நினைவுகூர்ந்த வைத்திய ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், நாடு எதிர்நோக்கும் அரசியல் விகாரத்தின் பிரதிபலிப்பே திஸ்ஸ குட்டியாராச்சி என வலியுறுத்தினார்.

நாட்டின் அரசியல் முறைமையில் அமைச்சர்கள் தமக்குக் கீழ் சண்டியர்களை வைத்துக்கொண்டு சில கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இன்று அந்த பாதாள உலகத்தின் சண்டியர் நாடாளுமன்றத்தில் அமைச்சராக முயற்சிக்கின்றார்.

புத்திசாலித்தனமாக செயற்படும் அரசியலில் அனுபவமுள்ள ஜனாதிபதியும், பிரதமரும் கூட இவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூடத் தவறினால் அரசியல் விகாரத்தின் விளைவுகளை நாடு அனுபவிக்க நேரிடும் என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்தார்.

“எனவே, இது சுகாதார நிபுணர்களின் பிரச்சினை அல்ல, இது இந்த நாட்டின் பிரச்சினை, இது இந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் பிரச்சினை, இது இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிரச்சினை, தயவு செய்து இந்த பிரச்சினைகளில் பிரச்சினைகளில் இவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். அவ்வாறான ஒரு ஒழுக்கம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.”

நாட்டில் இவ்வாறானதொரு அரசியல் கலாசாரம் ஏற்பட்டதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, உங்கள் பெயரை இந்த பாதாள உலகத்தின் சண்டியர் நாடாளுமன்றத்தில் அசிங்கப்படுத்துகின்றார் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாம் கூற விரும்புகின்றோம். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியவர் நாங்களல்ல நீங்களே. திஸ்ஸ குட்டியாராச்சி போன்ற எட்டாம் தரம் கூட கற்காத உறுப்பினருடன் தீர்க்குக்கொள்ள சுகாதார நிபுணர்களாகிய எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”

நாட்டை வழிநடத்த வேண்டிய இடத்தில் அமரக்கூடாத குழுக்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்த அந்த பொறுப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, குறைந்தது அவர்களின் வாயை மூடும் பொறுப்பையாவது நிறைவேற்றாவிட்டால், அவரது பதவிக்காலம் இழிவானதாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார்.

தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பதற்காக 16 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள் இன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  1. 2021 ஜூலை 05 அன்று அமைச்சர்களால் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட,

A. ஊழியர்களின் உரிமையை உறுதிப்படுத்துவது தொடர்பாக பதவிகளுக்கு பெயரிடும் சுற்றறிக்கையை வெளியிடத் தவறியமை.

B. 12 வருடங்களில் முதல் வகுப்பு பதவி உயர்வு முறை குறித்து,

i.துணை மற்றும் நிரப்பு தொழில் தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம்.

ii. முரண்பாடுகளை நீக்குவதற்கு உரிய முடிவை 01.11.2010 வரை ஒத்திவைக்க மீண்டும் அமைச்சரவை அனுமதியை பெறுதல்.

  1. ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை மாத்திரம் நீக்குவதால் ஏற்பட்ட இணையான சம்பள முரண்பாட்டை நீக்கி, இலங்கை தகுதிக் கட்டமைப்பை மீறாத வகையில் ஊதியக் கொள்கையைப் பேணுதல் மற்றும் ரனுக்கின் ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல்.
  2. மேலதிக நேர விகிதத்தைக் கணக்கிடுவதில், அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் அடிப்படைச் சம்பளத்தில் 1/80ஐக் கணக்கிட்டு, அதற்கேற்ப 21 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத அழைப்பு மற்றும் மாதிரிக் கொடுப்பனவைப் புதுப்பிக்கவும்.
  3. தொழில்முறை பட்டப்படிப்புக்கு பொருத்தமான சரியான சம்பள அளவை நிறுவுதல் மற்றும் பொருத்தமான பதவிகள் / வேலை வாய்ப்புகளை வழங்குதல்.
  4. அனைத்து சுகாதார நிபுணர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் "சுகாதார நிர்வாக சேவை" நிறுவுதல்.
  5. விசேட கடமைக் கொடுப்பனவை. 10,000/- ஆக உயர்த்துதல்.
  6. சுகாதார தொழில்முறை சேவைகளை மூடிய சேவைகளாக மாற்றுதல்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி