1200 x 80 DMirror

 
 

அப்பாவி தொழிலாளிகளின் ஒரே சொத்தாக காணப்படும் ஓய்வூதிய நிதியை கடத்துவதற்கு திட்டமிடுவது மனிதாபிமானமற்ற செயலாகும். சில பலம் படைத்தவர்கள் பங்குசந்தையின் ஊடாக இந்த நிதியை பயன்படுத்திய பல சந்தர்ப்பங்களை நாம் அறிவோம். இந்த அப்பாவி மக்களின் பணத்தை கொண்டு பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கின்றனர் என்று நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

ஐந்து விடயங்களை மையப்படுத்தி அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை 

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சில விடயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.
கீழ் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

• ஜனாதிபதி அவர்களின் சுதந்திர தின செய்தி
• பயங்கரவாத தடுப்புச் சட்டம்
• அன்னிய செலாவணி பற்றாக்குறை
• ஒரே நாடு ஒரே சட்டமும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குதலும்
• ஓய்வூதிய நிதியத்தின் மீது வரி அறவிடுதல்

ஜனாதிபதி அவர்களின் சுதந்திர தின உரை...

ஜனாதிபதி அவர்கள் மக்கள் முன்னிலையில் ஆற்றிய உரையை நாம் மிகவும் கவனமாக செவிமடுத்தோம். அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றுவதற்கு வலு கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம். தற்போது நாட்டு மக்களும் விவசாயிகளும் எதிர்நோக்கியுள்ள நிலைமை தொடர்பில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த தேவை இல்லாவிட்டாலும், அரசத் தலைவர் என்ற வகையில் அவர் இவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டியது அவரது கடமையாகும். மக்கள் படும் துயரங்களையும், அவர்களின் வேதனையையும், கடும் கோபத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தப் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக நாம் இனம்காணுவது பலவீனமான அரசு நிர்வாகமும், அரச சேவையை அரசியல்மயமாக்கி அதன் காரணத்தினால் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியுமாகும். அரச சேவையிலுள்ள திறமை வாய்ந்த அதிகாரிகளை புறம் தள்ளிவிட்டு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை கொண்டு செயற்பட்டமை இந்த வீழ்ச்சிக்கான காரணமாக நாம் கருதுகின்றோம். அரசாங்கம் மேற்கொள்ளும் முடிவுகள் உடனுக்குடன் மாற்றம் அடைவதற்கும் அவற்றை மீளப் பெறுவதற்கான காரணம் அதுவே. நிர்வாகத்திற்கு அனுபவம் மிக முக்கியமாகும்.

20ஆவது திருத்தம் மற்றும் 2/3 பெரும்பான்மை இருந்தும் மக்களுக்கு நலன் அளிப்பதற்கு முடியவில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்த குறைபாடுகளை அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் திருத்திக்கொள்ள வேண்டும்.

இம்முறை சுதந்திர தின விழாவை மிகக் கோலாகலமாக நடத்தினாலும் அது தொடர்பிலான மக்கள் ஆர்வம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்து இருந்ததை நாம் அவதானித்தோம். அதுவும் ஒரு வகையிலான செய்தி என்பதை கருத்தில் கொள்வது உகந்ததாகும்.

அன்னிய செலாவணி பற்றாக்குறை

அன்னிய செலாவணி பற்றாக்குறைக்கும் பலவீனமான நிர்வாக செயற்பாடுகளே காரணம். நம்முடன் தொடர்பில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார அறிஞர்கள் தெரிவிப்பது என்னவென்றால், நாட்டில் இடம்பெற்ற பாரிய அளவிலான ஊழல்கள், நீண்டகால திட்டங்கள் இல்லாமை மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் அதிக அளவில் மோசடிகளுக்கு உள்ளாதல் ஆகிய காரணங்களை முன் வைத்தனர். வெளிநாட்டு அறிஞர்கள் இதை Plundering of nation welth என்று குறிப்பிடுவர்.

இலஞ்ச ஆணைக்குழு உரிய வகையில் செயல்பட்டிருந்தால், சட்ட உத்தியோகத்தர்கள் அச்சமின்றி செயல்பட்டிருந்தால் பட்டப்பகலில் மேற்கொண்ட இத்தகைய கொள்ளை சம்பவங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் தற்போது நடப்பது என்ன இலஞ்ச ஆணைக்குழுவின் ஊடாக பலம் படைத்தவர்கள் தமது வழக்குகளை வாபஸ் பெறச் செய்கின்றனர். சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் ஊழலை ஒழிப்பதற்கு அரசியல் தலையீடுகள் இன்றி மேற்படி ஆணைக்குழுக்களை சுயாதீனமாக இயங்குவதற்கு நடவடிக்கைசெய்தனர்.

இலஞ்ச ஆணைக்குழுவின் சில அதிகாரிகள் கடந்த காலங்களில் மாதிரி நாடுகளுக்குச் சென்று வெளிநாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர். இலங்கையில் அரசியல் தொடர்புகள் மற்றும் அச்சுறுத்தல்களினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பில் எமக்கு தெரிவித்துள்ளனர். ஊழல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை உயரிய இடம் வகிப்பதாக சர்வதேசம் அடையாளப்படுத்திஉள்ளது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி அவர் மற்றும் அவரது நாட்டின் கவுரவத்தையும் நம்பிக்கையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

தற்போது இந்த சட்டத்தை திருத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தினரும் இந்த சட்டமானது இலங்கையில் தவறாக பயன்படுத்துவது தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலக மனித உரிமை அதிகார சபையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இந்து சட்டத்தை பயன்படுத்தி தமது எதிரிகளை பழி வாங்கும் பல சந்தர்ப்பங்களை நாம் அவதானித்துஉள்ளோம

43 வருடங்களுக்குப் பின் இந்த சட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதை நாம் பாராட்டுவதுடன், உலகில் ஜனநாயக நாகரீக நாடுகளில் கையாளும் வளர்ச்சியடைந்த உலகுக்கு உகந்த மதிக்கத்தக்க சட்டத்தை கொண்டு வருவதன் ஊடாகவோ தேவையான திருத்தங்களை மேற்கொள்வதோ சிறந்ததாக அமையும் என்பது எமது கருத்தாகும். இது தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் பலனளிக்கும். இதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் எதிர்வரும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத் தொடர்களில் கலந்துரையாடலாம்.

ஓய்வூதிய நிதிக்கு வரி விலக்கு அளித்தல்

அரச சேவையில் இல்லாத பெருமளவிலான மக்கள் தொகை இதன் உறுப்பினராக இருக்கின்றனர். ஓய்வு பெறும் போது அவர்களின் ஒரே என்னமாக இருப்பது அந்த பணத்தைக் கொண்டு ஒரு வீட்டை அமைத்தல், பிள்ளைகளின் படிப்புக்காக செலவழித்தல், பிள்ளைகளின் திருமணத்திற்காக அந்த பணத்தை பயன்படுத்துதல் போன்றவையாகும்.

அதனால் அப்பாவி தொழிலாளிகளின் ஒரே சொத்தாக காணப்படும் ஓய்வூதிய நிதியை கடத்துவதற்கு திட்டமிடுவது மனிதாபிமானமற்ற செயலாகும். சில பலம் படைத்தவர்கள் பங்குசந்தையின் ஊடாக இந்த நிதியை பயன்படுத்திய பல சந்தர்ப்பங்களை நாம் அறிவோம். இந்த அப்பாவி மக்களின் பணத்தை கொண்டு பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கின்றனர்.

மேற்படி சட்டத்திலிருந்து ஓய்வூதிய நிதியை அகற்றிக் கொள்ளுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

ஒரே நாடு ஒரே சட்டமும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிட்டு மன்னிப்பு வழக்குகளும்....
சுதந்திர தினம் என்று ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு கிடைக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர் பார்த்த போதிலும், அது அவ்வாறு இடம்பெறாமை தொடர்பில் நாம் வருத்தம் அடைகிறோம். ரவுடிகள், போதைப் பொருள் வர்த்தகர்கள், கொலைகாரர்கள் விடுதலை பெற்ற போதிலும் புகழ்பெற்ற கலைஞனை இவ்வாறு சித்திரவதை படுத்துவது ஒரே நாடு ஒரே சட்டம் இயங்கிவரும் நாட்டில் ஏற்புடையது அல்ல.
நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் அபிவிருத்திக்காகவும் நல்ல எண்ணத்தில் நாம் முன்வைத்த விடயங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு செல்ல வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

Screenshot 2022 02 11 155928

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி