தற்போது ஒரு தரப்பு பிரதமர், அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்துகொள்வது குறித்து இரகசியப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சந்தர்ப்பவாத முறையை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக மாற்றும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று நடந்த வைபவமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தின் எதிர்காலம் குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு, கொள்கை, வேலைத் திட்டம் ஆகியவை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரகடனம் இந்த வைபத்தின்போது வெளியிடப்பட்ட்து.

சீனாவிலும், இந்தியாவிலும் இருந்து அரிசி!

இங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,

உரத்தைத் தடை செய்து விளை நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றும் சதித் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும், பல கோடி ரூபா இலாபத்தை தனது கூட்டாளிகள் பெறும் வகையில் இதனை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்த அரசாங்கம் தற்போது சீன அரிசியை நிரப்பி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உரப் பிரச்சினையால் நட்டமடைந்த விவசாயிகளுக்கு உடனடிய நட்டஈடு வழங்க வேண்டும் என்றும், அதற்கான தீர்மானம் விரைவில் நாடாளுமன்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிதி ஒதுக்கும் யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் நிபந்தனையற்ற முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி