1200 x 80 DMirror

 
 

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு வந்த சிலர் அங்கு முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய குண்டர்களை அங்கு கூடியிருந்தவர்கள் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் 5000 ரூபா பணம் கொடுத்து தாங்களை அங்கு அழைத்துவந்ததாகவும் அந்தக் குண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிப்பட்ட இருவரையும் விசாரித்த பின்னர், அவர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். முட்டைகளை வீசியதையும், யார் வீசச் சொன்னார்கள் என்பதையும் அவர்கள் இருவரும் ஏற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டின் மீது முட்டை தாக்குதல் நடத்துவதற்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த குழுவை அனுப்பப்பட்டதாகவும், இவர்கள் சர்ச்சைக்குரிய தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 5000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இதற்கு முன்னர் கொழும்பு கோட்டையில் ஜே.வி.பி.யின் ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியவர் தாம் எனவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போது மக்கள் தேசிய மக்கள் சக்தி குறுித்து பேச ஆரம்பித்துள்ள நிலையில், அவர்களின் மாநாட்டைக் குழப்புவதற்கு இந்த முட்டைத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிடிக்கப்பட்ட இருவரும் நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முதலில் நிட்டம்புவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் கம்பஹா மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க தொலைபேசியில் செய்த முறைப்பாட்டையடுத்து நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான ASP பிரபாத் விதான சந்தேக நபர்களை கைது செய்ய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gampaha 2022.01.30 3

Gampaha 2022.01.30 4

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி