1200 x 80 DMirror

 
 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

6.9 பில்லியன் டொலர் கடனை இவ்வருடம் செலுத்துவது இலங்கைக்கு மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், மூலப்பொருட்கள், எரிபொருள் உட்பட சகலவற்றிற்கும் நிதியைக் தேட வேண்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வருடம் வழங்கப்பட வேண்டிய கடன்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சர்வதேச இறைமை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மாற்று வழிகளுக்காகவும் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர், கடனை செலுத்துவதை தவிர்த்து பொருளாதார நெருக்கடியை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும், அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, பசில் ராஜபக்ஷ, அத்தகைய விஷயம் விவாதிக்கப்படுவதாக கூறினார்.

பெலிஸ், சம்பியா மற்றும் ஈக்வடோருக்குப் அடுத்து தொற்றுநோய்க்குப் பிறகு அதன் இறையாண்மை பத்திரக் கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் நாடாக இலங்கை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் இந்தியாவின் கூடுதல் உதவியுடன் சுற்றுலா மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதன் மூலம் இந்த சிக்கலை நாடு தவிர்க்க முடியும் என்றும் இலங்கை அதிகாரிகள் கூறுவதாக செய்தித்தாள் கூறுகிறது.

இந்த ஆண்டு இலங்கைக்கு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் என்பதும், மருந்துபொருட்கள், மூலப்பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அனைத்திற்கும் பணம் தேட வேண்டியிருக்கும் என்பதும் தாம் அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி