1200 x 80 DMirror

 
 

உயிர்க்கொல்லி கொரோனாவைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு தருவிக்கப்பட்ட ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் குவிந்துகிடப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுவரை சுமார் 5 மில்லியன் பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும், 9 மில்லியன் தடுப்பூசிகள் குவிந்துகிடப்பதாக தெரியவருகிறது. அத்துடன், இந்தத் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதில் மக்களுக்கு இருக்கும் பிழையான அபிப்பிராயமே தடுப்பூசியைப் பெறுவதில் ஆர்வம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், பரவி வரும் வதந்திகள், கட்டுக்கதைகள் என்பவற்றால் பொதுமக்கள் இதனைத் தவிர்த்து வருவதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், மக்களுக்கு விழிப்புணர்வைத் தரும் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என்பவற்றை சுகாதாரத் துறையினர் வெளியிட ஆரம்பித்துள்ளனர். எனினும், இந்த 9 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த வாரம் சராசரியாக நாளாந்தம் 800 - 900 பேர் வரை புதிய தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், இந்தத் தொகை மும்மடங்காக இருக்கும் என பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் நடத்தப்படம் பி.சி.ஆர். பரிசோதனைகளின்படி இந்த எண்ணிக்கைத் தெரியவந்தாலும், இது மும்மடங்காக இருக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

"தரவுகள் நிலைமைகள் துல்லியமாக இருந்தால், புள்ளிவிவரங்கள் 2,500 க்கும் அதிகமாக சேர்க்கப்படும், மேலும் டெல்டா 3,500 ஐத் தாண்டியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் தற்போது மிகக் குறைவான சோதனைகள் நடத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நபர் நோயைப் பரப்பினால் மட்டுமே அது நேர்மறையானது."

இந்த நிலையில் தான், தடுப்பூசியை வழங்குவதில் அரசாங்கம் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. மொத்தமாக இதுவரை 5 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மருந்துப் பொருட்கள் துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

"பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் எடுக்கவில்லை என்றால், அவை ஜூலை 2022 க்குள் காலாவதியாகிவிடும்" என்கிறார் பேராசிரியர் சன்ன ஜெயசுமண.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சந்தன கூறும்போது,
"தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள், ஏனெனில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைத்து தரவுகளும் காட்டுகின்றன" என்று குறிப்பிட்டார்.

சுகாதார திணைக்களத்தின் கூற்றுப்படி, நாட்டில் மொத்த கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 604,581 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 576,781 பேர் குணமடைந்துள்ளதாகவும் மேலும் 12,454 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி