1200 x 80 DMirror

 
 


பேருவளை அல் பாஸிஹத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் ஆய்வுக்கூடம் 400,000 ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பண்முகப்படுத்த்ப்பட்ட நிதியில் இருந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற இம்தீயாஸ் பாக்கீர் மாக்கர்,
''இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதும், திறந்துவைப்பதும் அரசியல் இலாபம் பெறுவதற்காக என்று பொதுவான கருத்து உள்ளது. இருப்பினும், இந்த நிகழ்வு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இலங்கையில் கல்வி என்பது விசேட முதலீடு என்பதை உணர்ந்து, பல கருத்துள்ள அரசியல் பிரதிநிதிகள் இவ்வாறான பணியை முன்னெடுக்க ஓரணியில் இணைந்திருப்பதுபாராட்டுக்குரியது.'' என்ற தெரிவித்தார்.

இந்த வாய்ப்பை இன்று அனைத்து கட்சி மாநாடாகவே பார்க்கிறேன். அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. புகழ் என்பது மூங்கிலைப் போன்றது. கடமைகளைச் செய்வது மிக முக்கியமானது என்று துறவி ஒருவர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது. சமூகத்திற்காக பணியாற்றுபவன் இறைவனுக்கு மிக அருகாமையில் இருக்கிறான் என்று இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி