1200 x 80 DMirror

 
 

"நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்" – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

"கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6,025 கட்டில்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கக்கூடிய வளம் உள்ளது. பழைய நடைமுறை பின்பற்றப்படும். அத்துடன், வைத்தியசாலைகளில் போதுமானளவு ‘ஓட்சிசன்’ உள்ளது. எனவே, வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்கள் போலியானவை.

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமலிருக்க, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே நாடு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் இன்னும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன" என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி