'முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரை  'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக நியமித்ததையடுத்து சில பௌத்த தேசியவாதிகள் உட்பட இலங்கையில் உள்ள ஒரே அரசியல் நோக்குடைய பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். .'

இந்த விடயம் குறித்து மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தனது கருத்தை இவ்வாறு முன்வைத்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு இல்லாமல் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால்  சட்டம் முறையானதாக  இருக்க வேண்டும்  மாறாக புதிதாக  நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் பின்னரே நாட்டில் சட்டமீறல் அதிகரித்து வருகின்றது அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சந்தேகமும் எழுகின்றது .


அனைத்து தேசிய இனத்தவர்களையும் 'ஒரே நாடு ஒரே சட்டம்' எந்தவொரு பாகுபாடுமின்றி பார்க்கின்றதா?  

ஏற்கனவே நாட்டில் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது புதிதாக கொண்டுவரப்பட்ட  'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற இந்த சட்டத்தின் கீழ்  நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடுவதைக் காண்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தின்  செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால் அவர்களால் எந்தவிதமான நீதியும் கிடைக்காது என்பதை எவராலும் தெரிந்து  கொள்ள முடியும். வர்த்தமானிகள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை அவர்களால் முறையாக செயல்படுத்த முடியுமா?

ஒரு நாடு ஒரு சட்டம் என்று அவர்கள் கூறினாலும்  பௌத்தர்களுக்கும்  இந்துக்களுக்கும் இஸ்லாமிர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த நேரத்திலும் இந்த அரசாங்கம் நன்மை செய்வதையோ நீதி வழங்கப்படுவதையோ நாங்கள் காணவில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்

இந்த விடயம் குறித்து தங்கல்லை சாரத தேரர்  தனது கருத்தை இவ்வாரறான முறையில் முன்வைத்தார்.

'தற்போது 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற ஒரு விடயம் நாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது  ஒருபுறம் இது ஒரு நல்ல நடவடிக்கை என்று சிலர்  கருதலாம் ஆனால் இந்த செயலணியின் தலைவராகவோ அங்கத்தவர்களாகவோ நியமிக்கப்படுபவர்கள் சரியான முறையில் செயற்பட வேண்டும். ஆனால் அவர்களின் செயற்பாடுகளில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன.  

அவர்கள் மதகுருமார்களாக கூட   இருக்கலாம்.எப்பொழுதும் நாம் சரியாக இருக்கின்றோம்  என்ற எண்ணத்தில் சட்டத்தைப் பிரயோகிக்க நமக்கு உரிமை இல்லை. 'சப்பே சத்தா பவந்து சுகிதாத்தா' அதாவது 'எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென புத்த பெருமான் போதனை செய்துள்ளார்.

மேலும் அண்டை வீட்டாரையும் அனைத்து உயிரினங்களையும் நேசிக்க வேண்டுமென இயேசு அறிவித்தார்.அனைத்து மதங்களும் அன்பு பாசம் மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டவை.அப்படியானால் நாம் செய்ய வேண்டியது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளின் தற்போதைய மாற்றங்கள் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங் மூலம் இணையுங்கள்

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி