1200 x 80 DMirror

 
 

இந்தோனேசிய நாட்டின் தலைநகராக ஜகார்த்தா இருந்து வருகிறது. இந்த நிலையில் தலைநகரை அங்கிருந்து நுசந்தாராவுக்கு மாற்றுவதற்கான சட்டத்தை அந்த நாட்டின் நாடாளுமன்றம் இயற்றியது.

நாட்டின் பல தலைவர்கள் பல்லாண்டு காலமாக கூறி வந்த யோசனையின் செயல்வடிவம் இதுவாகும். புதிய தலைநகர் சட்டம், அதிபர் ஜோகோ விடோடோவின் லட்சியமான 32 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.40 லட்சம்கோடி) மெகா திட்டத்துக்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. மேலும் தலைநகர் வளர்ச்சிக்கு நிதி அளித்து, நிர்வகிக்கப்படும் என்பதையும் குறிப்பிடுகிறது.

இந்த மசோதாவை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து திட்டத்துறை மந்திரி சுகர்சோ மொனோர்பா கூறும்போது, “புதிய தலைநகர் ஒரு மைய செயல்பாட்டைக் கொண்டிருக்கும். நாட்டின் அடையாளத்தின் சின்னமாகவும், பொருளாதார ஈர்ப்புக்கான புதிய மையமாகவும் இருக்கும்” என குறிப்பிட்டார்.

இந்தோனேசியா தலைநகரை மாற்றுவதற்கான முக்கிய காரணம், பருவநிலை மாற்றத்தால் ஜகார்த்தா வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டம் வகுக்கப்பட்டுளது. இந்த நகரம் நாள்பட்ட நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தலைநகரை நுசந்தாராவுக்கு மாற்றுவது தொடர்பாக பல கலந்தாய்வுகள் நடத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.

ஜகார்த்தாவில் இருந்து நுசந்தாராவுக்கு தலைநகர் மாற்றப்படும் என்று அதிபர் ஜோகோ விடோடோ 2019-ல் அறிவித்தார். ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த நடவடிக்கை தாமதமானது. தற்போது சூடுபிடித்துள்ளது. தலைநகரை மாற்றுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் 2022-2024-க்கு இடையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி