இந்தியாவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலின் பக்தரான பிரதமர் மஹிந்த ராஜபக்விடம் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பஞ்ச மகா ஈஸ்வரங்களை புனித ஸ்தலங்களாக பெயரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் உள்ள திருக்கேஸ்வரம்,  திருகோணமலை திருகோணேஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம், தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீசுவரம் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வர கோயில் வளாகத்தை தேசிய புனிதப் பிரதேசங்களாக அறிவிக்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ், இந்து சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாரையை புனித ஸ்தலமாக பிரகடனப்படுத்தி அதற்கான சான்று பத்திரங்கள் எதிர்வரும் வெசாக் காலத்தில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்து மத அமைப்புகள் தமது அரசியல் நடவடிக்கைகளை புறந்தள்ளி இந்த பஞ்ச ஈஸ்வரங்களை புனித இடங்களாக அறிவிக்கும் வகையில், இந்து சமய விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் இணைந்து கோரிக்கை விடுக்க வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒவ்வொரு வருடமும் திருப்பதி இந்து கோவிலுக்கு சென்று வழிபடுபவராக இருப்பதால் அவர் சிறப்பாகச் செயற்படுவார் என குகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1965ஆம் ஆண்டு முதல் மன்னார் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு இந்து புனித பூமியாக அறிவிக்குமாறு  அனைத்து அரசாங்கங்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த போதிலும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி