நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சில வேலை அந்த நிலைமை அடுத்த சில மாதங்களுக்குள் ஏற்படலாம் அல்லது அடுத்த வருடங்களுக்கு ஏற்படலாம். இது நீடிக்க போகும் பிரச்சினை. இதனால், மக்கள் தற்போது வாழும் நிலைமையில் எதிர்காலத்தில் வாழ முடியாது போகும் என எச்சரிக்கின்றோம்.

பாற்சோறு சாப்பிட்டு ஆட்சிக்கு கொண்டு வந்த இந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போது பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளது. சிகப்பு பச்சை அரிசியின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால், ஏப்ரல் மாதமளவில் இந்த விலைகள் 200, 250 ரூபாவாக அதிகரித்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

இதுதான் உண்மையான நிலவரம். அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமையில் நாட்டில் உணவு பற்றாக்குறை அல்லது பஞ்சம் ஏற்படலாம். அரிசியை இறக்குமதி செய்ய பணமில்லை.

அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் இறக்குமதி செய்வோம் என அரசாங்கம் கூறியது. ஏற்படப் போகும் நிலைமையை பார்த்தால் அந்நிய செலாவணி கையிருப்பில் எதுவும் மிஞ்சாது போகும்.

பசளையை இறக்குமதி செய்ய முடியாத அரசாங்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதளவில் அரிசியை இறக்குமதி செய்ய முடியாமல் போகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரும் போக அறுவடையில் அரிசி கிடைக்காது போனால், மக்கள் உண உணவின்றி, வாழைத்தண்டை சாப்பிடும் பொருளாதார நிலைமை உருவாகும்.

இதனால், தற்போதைய அரசாங்கத்துடன் இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தயாராகுமாறு மக்களிடம் கூறுகின்றோம். இந்த பிரச்சினை 2022 ஆம் ஆண்டுடன் முடியாது.

2023 ஆம் ஆண்டு நாம் நான்காயிரத்து 247.60 மில்லியன் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டில் செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடான தொகையை அடுத்த ஆண்டும் செலுத்த வேண்டும்.

அத்துடன் சர்வதேச பிணை முறிகளுக்காக இலங்கை ஆயிரத்து 250 மில்லியன் ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. அபிவிருத்தி பிணை முறிகளுக்கு 404.6 மில்லியனை செலுத்த வேண்டியுள்ளது.

இந்த அபிவிருத்தி பிணை முறிகளுக்கான வட்டியாக 391.76 மில்லியனை செலுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கூட்டினால், 6 ஆயிரத்து 293.36 மில்லியன் ரூபாய். இதனை காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரிக்கலாம் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி