மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக அங்கரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, குமார வெல்கம தலைமையிலான புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளன.

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வீ.இராதாகிருஸ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்தே தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஸ்தாபித்திருந்தது. எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகியோருக்கிடையே வெளிவராத பனிப்போர் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை, புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டி;கான அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்ப்களைக் கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ், தொடர்ச்சியாக மூன்று அமர்வுகள் அல்லது 90 நாட்களுக்கு தொடர்ச்சியாக பதவியை இழந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை மீண்டும் நியமிக்க முடியாது என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி