leader eng

ஜனாதிபதி நினைத்தால் த ன்னையும் பதவி நீக்கம் செய்யலாம் என்றும், அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதாக தெரிவித்த அமைச்சர் டலஸ், இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறினார்.

அதோடு சுசில் பிரேமஜயந்த தனது நண்பர் என்றும் அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது 'அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். அரசை விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்குத் தடையா?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

"நான் இந்த ஊடக சந்திப்புக்கு வரும் வழியில்தான் அது தொடர்பில் அறிந்தேன். அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதி அந்த முடிவை எடுத்துள்ளார். இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

சுசில் பிரேமஜயந்த எனது நண்பர். அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைகின்றேன். ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்.

அரசை விமர்சித்ததால்தான் அவர் நீக்கப்பட்டார் எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்த அமைச்சர் டலஸ், தற்போதைய அமைச்சரவையில் சுதந்திரம் இருக்கின்றதாகவும் உதய கம்மன்பில போன்றவர்கள் நீதிமன்றத்தைக்கூட நாடியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி