சூடான் நாட்டில் வெடித்த மக்கள் போராட்டம் எதிரொலியாக பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வடஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த அக்டோபர் 25ம் தேதி சூடான் ராணுவம் இடைக்கால அரசை கவிழ்த்துவிட்டு நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.  அப்தல்லா வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை கடந்த நவம்பர் மாதம் மீண்டும் பதவியில் அமர்த்தியது.  ஆனால், அவர் ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு அதிகார பகிர்வுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதற்கு எதிரப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மக்கள் ஆட்சி வேண்டும் என்ற கோஷமும் எழுந்தது.  ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டார்.  இதனால் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் அந்நாடு வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி