leader eng

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நிவாரணப் பொதியை வழங்க நேற்று (03) கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

# 666,480 ஓய்வூதியகாரர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 மேலதிக கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

# சமுர்த்தி பெறுனர்களுக்கான மாதாந்த கொடுப்பனவான 3500 ரூபாவுக்கு மேலதிக கொடுப்பனவாக 1000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

# விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல்லை ரூ.75 கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

# இதேவேளை, 20 பேர்ச் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

# ஒரு ஏக்கருக்கு குரைவாகவும் 20 பேர்ச்சிற்கு அதிகமாக உள்ள வீட்டுத்தோட்டங்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு அதே தொகையை இரு தரப்பினருக்கும் திரும்பிச் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

மலையக மக்களின் நன்மை கருதி ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ கோதுமை மா மாதாந்தம் 80 ரூபா என்ற விலையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் மொத்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

# இதனிடையே, மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களுக்கு சிறப்பு கொடுப்பனவாக ரூ.5,000 வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பசிலை குழப்பமடைய வைத்த கெஹலிய மற்றும் ரோஹித!

நிவாரணப் பொதி தொடர்பில் முடிவெடுப்பதற்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு சற்று முன்னர், அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியை அணுகி, தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறி கூட்டத்திலிருந்து வெளியேற அனுமதி கோரினார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஓடிவந்து, அமைச்சர் கம்மன்பில நிவாரணப் பொதியை அறிவிப்பதற்கு முன்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி உரிய தீர்மானங்களை அறிவிக்குமாறு கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் தனது அமைச்சுக்குள் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டி அதற்கமைய அமைச்சரவை முடிவுகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி