இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என இந்தியயாவின் மூத்த அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்து சமுத்திரத்தில் இந்தியா தனக்கு நீண்ட கால சகா ஒருவர் தேவை என கருதினால் இந்தியா தற்போது ராஜபக்ச அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை( ஒத்திவைக்கப்பட்ட வட்டி) கடனாக வழங்கவேண்டும்.

அல்லது சீனாவிற்கு இளைய சகா ஒருவர் கிடைக்கும் நிலையை எதிர்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.

அதேவேளை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் பல வெளிவிவகார கொள்கைகளில் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் , இலங்கை இன்னொன்றாக இருக்கவேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி