கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்த பட்சம் ஒரு வேளை உணவையாவது சாப்பிட முடியுமா என்ற கவலையில் இன்று உள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தற்போது ஏமாற்றமடைந்துள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான  வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஒரு வேளை உணவைக் கூட வாங்க முடியாத சூழலில் அரசாங்கம் மக்களை இரண்டு வேளை உணவை உண்பதை ஊக்குவித்துள்ளதாகவும், சில அமைச்சர்கள் தமது சொந்த உணவை வீட்டிலேயே பயிரிடுமாறு மக்களை ஊக்குவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி மேலும் தெரிவித்தார். 

உர நெருக்கடியால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் காண அரசாங்கத்துக்கு நிபுணர்களின் ஆலோசனை தேவையில்லையென சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், நடைமுறை வேலைத்திட்டத்தை விரைவில் அமுல்படுத்தாவிடின் தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி