கொவிட் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வரும் ஆறு நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தமது நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியை பெற்றுக்கொண்டுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாணய நிதியத்திடம் உதவிகளை பெற்றுக்கொண்ட நாடுகளில் எந்த நாட்டுக்கும் பாதிப்பான மற்றும் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் எதனையும் நிதியம் விதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கி இருக்கும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று டொலர் நெருக்கடி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருந்தார்.

சர்வதேச நாணய நிதியம், கடனுதவியை வழங்கும் போது, நிறைவேற்ற முடியாத மற்றும் பாதிப்பான நிபந்தனைகளை விதிக்காது என எண்ணுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

நாட்டின் பயன்பாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்கள் கூட இலங்கையின் கையிருப்பில் இல்லை.

எரிபொருளுக்கான மானியத்தை பெற அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இதனால், சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு மாற்று வழி கிடையாது எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி