யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 105 வயதான மூதாடி ஒருவர் இன்று உயிரிழதுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 105 வயதுவரை வாழ்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை ஆவார்.

உயிரிழந்த மூதாட்டிக்கு 5 ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளுமாக 10 பிள்ளைகள் உள்ள அதேவேளை பேரப் பிள்ளைகள் 45 மூன்றாம் தலைமுறையான பூட்டப் பிள்ளைகள் 83 நான்காம் தலைமுறையாக 12 கொப்பாட்டன் பிள்ளைகளுமாக மொத்தம் 150 பேரை கொண்ட குடும்பம் ஆகும்.

லட்சுமி தம்பிப்பிள்ளை 10/5/1916 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் 1901 ஆம் ஆண்டு பிறந்து 1990 ஆம் ஆண்டு 90 வயதில் காலமானார்.

இதுவரை எந்தவிதமான நோய் நொடிகளுமின்றி சுகதேகியாக வாழ்ந்து வந்த நிலையில் குறித்த மூதாட்டி உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி