கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சகல மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தைப் பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் அரசாங்கம் தவறான தீர்மானங்களை எடுக்குமாயின் ஜனநாயக நாடு என்ற வகையில் பிரஜைகளுக்கு தமது கருத்து களை வெளியிட உரிமை உண்டு. அதேவேளை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைப் பாது காப்பதற்காகச் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மாணவர், மாணவிகள் தமதும், இலங்கை மக்களதும் ஜனநாயக உரிமைகளை உரிய முறையில் செயற்படுத்தினர். துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டினர்.

மௌனமான அதேசமயம் பலம்வாய்ந்த அறிக்கையில் மாணவர்கள் தமது எதிர்ப்பை மிகவும் ஜனநாயக முறையில் வெளிக்காட்டினர். இந்நிலையில் அன்றைய தினம் இலங்கையில் ஜனநாயகம் வெற்றி பெற்ற நாளாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பலரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளபோதும், எனது கருத்தின் படி அன்றைய தினம் தான் நாட்டின் ஜனநாயகம் வென்றதாக நான் நினைக்கிறேன். இளைஞர்கள், யுவதிகள் மிகவும் ஜனநாயகமாக நடந்து கொண்டனர்.

தங்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏனையவர்களின் சுகத்திரத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாது ஏனையவர்களின் மனதைக் காயப்படுத்தாமல் செயற்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக யாரிடமிருந்தும் கேள்வி கேட்காமல் அரசாங்கம் தவறான தீர்மானம் எடுத்தால் அது குறித்து எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை ஜனநாயக நாட்டில் பொது மக்களுக்கு உரிமை உண்டு.

அந்த இளைஞர்கள், யுவதிகள் யார் என்று தெரியவில்லை என்றும் இருப்பினும் தான் முன்னாள் தலைவர் என்ற வகையில் தனது கௌரவத்தை வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.    

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி