உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசானக்த்தை வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் உர நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளே மரக்கறி மற்றும் அரிசியின் விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாய சமூகம் தமது செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உரிய உரங்களை உரிய நேரத்தில் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எனினும் அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியதால் விவசாய சமூகம் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் பட்சத்தில் இயற்கை உரம் மற்றும் இழப்பீடு வழங்குவதாக விவசாய அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நெருக்கடியின் போது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றனர் என அவர் கேள்வி எழுப்பியதுடன், தற்போதைய நிலைமையை ஏன் தற்போதைய நிர்வாகத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடிப்பினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சமயலறைகளுக்கு இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவதற்கும், பொது மக்களுக்கு பணத்தினை திரும்ப செலுத்தவும், மாற்று சிலிண்டர்களை வழங்குவதற்கும் அரசாங்கம் ஏன் தலையிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குழுக்களை நியமிப்பதை விட தற்போதைய நிர்வாகம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், சர்ச்சைக்குரிய பத்திரப் பரிவர்த்தனை, சீனி ஊழல், பூண்டு ஊழல் தொடர்பாக அரசாங்கம் நியமித்த குழுக்கள் பலனளிக்கவில்லை.

எரிவாயு சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி