1200 x 80 DMirror

 
 

உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு பாகிஸ்தானுக்கு 19.5 கோடி டாலர் நிதியுதவி  வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தானில் மின்சார விநியோகத்தை மேம்படுத்துவதற்கும், நுகர்வோருக்கான சேவைத் தரத்தை அதிகரிக்கவும் இந்த நிதி உதவி அளிக்கப்பட இருக்கிறது. அது மட்டுமின்றி எரிசக்தித் துறையில்  சீர்திருத்தங்களை செயல்படுத்த இந்த நிதி உதவியை உலக வங்கி வழங்குகின்றது.

மின் விநியோகத்தை மிகவும் திறமையாக நிர்வகிப்பதற்கும் மின் கட்டணத்தின்   நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கும் விநியோக நிறுவனங்களுக்கு செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த நிதி பெரிதும் உதவும்.

இந்த நிதியின் மூலம் வருவாய் சேகரிப்பு  அதிகரிப்பதோடு  வருவாய்  இழப்புகளும் குறையும். தொழில்நுட்பம் மற்றும் தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தி செயல்பாடுகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் இந்த நிதியை கொண்டு பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்த இருக்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி