ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (16) கம்பஹா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.2013 ஒகஸ்ட 01ம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தின் முன்னாள் பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன, கம்பஹா பிரதேச சபையின் உறுப்பினராக இருந்த நிலந்த பெரேரா உள்ளிட்ட பிரதிவாதிகள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகயிருந்தனர்.

இதன்போது சாட்சி வழங்கிய நிலந்த பெரேரா, அத்தருணத்தில் வெலிவேரிய நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கருகில் பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன உட்பட இராணுவ அதிகாரிகள் வந்ததாகக் குறிப்பிட்டார்.

10 நிமிடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறிவிட்டு அருகிலிருந்த எரிபொருள் நிலையத்திற்கு சென்றதாகவும், பின்னர் கைபேசியில் அழைப்பொன்றை எடுத்துவிட்டு, ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஆவேசத்துடன் நுழைந்து ஒரு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க முயன்றபோது கொந்தளிப்பான நிலை தோன்றியதாகவும் சாட்சி குறிப்பிட்டார்.

சாட்சி தொடர்ந்து கூறுகையில், அவ்விடத்திலிருந்த இராணுவ அதிகாரிகள் அங்கிருந்தவர்களை தடிகளால் தாக்கியதோடு, அப்போது ஏற்பட்ட பயம் காரணமாக தான் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டதாகவும் கூறினார். மேலதிக விசாரணை இன்று (17) வரை ஒத்திவைக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி