2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி காலை 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைக்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

நேற்று (12) நள்ளிரவு முதல் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சார்பில் பாராளுமன்றத்தில் அனுதாபம் தெரிவிக்கும் தினமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனவரி 13ஆம் திகதி முழு நாளையும் ஒதுக்குவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்திருந்தது.

2022ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற அமர்வுகளை ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிப்பது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் டிசம்பர் 09ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. ஜனவரி 13 ம் திகதி காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர சார்பில் இரங்கல் பிரேரணையை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி