சமகி ஜன பலவேகயவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் இன்னும் கட்சியின் உப செயலாளர் என்று ஆணைக்குழு கூறுகிறது.

2021.12.4 கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு வழங்கிய தகவலில்  இருந்து தெரியவந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரங்களில் பெண் பிரதிநிதிகள் தொடர்பில் சஞ்சீவ விமலகுணரத்ன 'ஒன் டெக்ஸ்ட் இன்ஷியேட்டிவ்' சார்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு அதிகூடிய நிறைவேற்று அதிகாரம் வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து கட்சியின் ஒழுக்கத்தை மீறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சமகி ஜன பலவேகவின் உரிமையாளர் தாம் என டயானா கமகே பல தடவைகள் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

டயானா கமகே தவிர, கல்விச் செயலாளர் சமத்க பண்டார ரத்நாயக்க மட்டுமே சமகி ஜன பலவேகவின் அதிகாரத்துவத்தில் பெண்கள் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் கட்சியின் முக்கிய பெண் என்றும் கூறப்படுகிறது.

இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட சில அரசியல் கட்சிகளின் அதிகாரவர்க்கத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தில் வெளியாகியுள்ள மிக முக்கியமான விடயம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி