Tamil Leader News
முக்கியம்
காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●'கொபெய்கனே அழகி படுகொலை'யின் உண்மை; நவ. 12இல் ‘BLOOD LACED TEARS’ஆக வெளியீடு!●புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●
செய்திகள்

44 இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்!

T

The Leader Desk

மே 3, 2024 • 11:21 AM

44 இலங்கையர்களுக்கு  பொதுமன்னிப்பு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரச மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்கள் உரிய நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
  • அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து அவர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்யும் என்று அது மேலும் கூறியது.
  • இதேவேளை,, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன, இந்த இலங்கையர்களை மன்னிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அதன் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரச உத்தரவின் பேரில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. 


2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்த இலங்கை கைதிகள் அரச உத்தரவின் பேரில் மன்னிப்பு பெற்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


அரச மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்கள் உரிய நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து அவர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்யும் என்று அது மேலும் கூறியது.

இதேவேளை,, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன, இந்த இலங்கையர்களை மன்னிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அதன் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...