தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அருகில் வைத்து, இன்று (04) பகல் தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது அங்கிருந்த அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, தாக்குதலை முறியடித்ததாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது படைக்கலசேவிதர் மற்றும் பாராளுமன்ற பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் இதனையடுத்தே வெளிநடப்புச் செய்ய எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாகவும்  கிரியெல்ல தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி