இலங்கையின் வலுசக்தி விநியோகத்தில் பங்களிக்கும் சீனாவின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.நிதியமைச்சர் பசில் ராஜபக்விற்கும் இந்திய நிதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் நாகதீபம், நெடுந்தீவு மற்றும் அனலலைத்தீவு ஆகிய தீவுகளில் கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்பை நிறுவுவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

சைனோ சோர்ஸ் ஹைப்ரிட் டெக்னாலஜிக்கு (Sino Source Hybrid Technology) வழங்கப்பட்ட இந்த திட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டு மாலலைத்தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

மாலைத்தீவில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையின் மூன்று  தீவுகளில் கலப்பு மின் அமைப்பின் கட்டுமானத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக  கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

 சீனா குறிப்பிட்டுள்ள மூன்றாவது தரப்பாக இந்தியா இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரியில், தமிழ்நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் கட்டப்படும் சீனத் திட்டத்திற்குப் பதிலாக, இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவியுடன் இந்தியா தனது சொந்த  வலுசக்தித் திட்டத்தை அமைக்க முன்மொழிந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

நவம்பர் 29ஆம் திகதி மாலைத்தீவு தலைநகருக்கு தெற்கே உள்ள அட்டோலில் உள்ள 12 தீவுகளிலும் வலுசக்தி திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளதாக, மாலைத்தீவின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமினாத் ஷோனா அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் எவ்வித கருத்தையும்  வெளியிடவில்லை.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி