அரசாங்கத்திடமிருந்து எவ்வித மானியங்களும் இல்லாமல் மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து மாதாந்தம் வழங்கப்படும் மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதை தாமதிப்பதால் பல்கலைக் கழக மாணவ மாணவிகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.

மஹபொல புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கு அரசாங்கம் வழங்கும் புலமைப் பரிசில்களும் மாதக்கணக்காக வழங்கப்படவில்லையெனவும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கணைப்பாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டுகிறார்.

தற்போதைய வாழ்க்கை செலவு காரணமாக மஹபொல கொடுப்பனவை ரூ10,000 வரை அதிகரிக்குமாறும், கடந்த காலத்தில் அ.ப.மா.ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. என்றாலும், தற்போது வழங்கப்படும் பணத்தையும் நீண்டகாலத்திற்கு தாமதிப்பதை ஏற்க முடியாதெனவும் மாணவர் ஒன்றியம் கூறுகிறது.

குறைந்த வருமானமுடைய குடும்பங்களிலிருந்து பல்கலைக் கழக கல்வி வரம் கிடைக்கும் மாணவ மாணவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படுவதைப் போல மாதாந்தம் ரூ.5,000 வீதம் ஒரு வருடத்திற்கு 10 மஹபொல தவனைகளும், ஏனைய மாணவர்களுக்கு மாதமொன்றிற்கு ரூ2,5000 வீதம் வருடத்திற்கு 10 புலமைப் பரிசில் தவனைகளும் கிடைக்க வேண்டும். ஆனால், அந்த உதவி நிதியை சரியான நேரத்திற்கு வழங்குவதை அதிகாரிகள் தவிர்த்துள்ளனர். களனி பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இதுவரை 7 மாதங்களுக்கான மஹபொல கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதுடன், ஏனை பல்கலைக் கழகங்களிலும் மூன்று நான்கு மாதங்கள் தாமதிக்கப்பட்டுள்ளன.

ரஜரட்ட பல்கலைக் கழகத்தில் 8 மாதங்களாக புலமைப் பரிசில் வழங்கப்படவில்லை. ஏனைய பல பலகலைக்கழங்களில் ஒகஸ்ட் மாதத்தின் பின்னர மஹபொல மற்றும் மாணவர் உதவிநிதி வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

பெருந்தொற்று காரணமாக கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்நிலை (ஒன் லைன) கல்வி நடவடிக்கைகளுக்காக தவனை அடிப்படையில் வாங்கப்பட்ட கணினி மற்றும் டெப்களுக்கு செலுத்த வேண்டிய தவனை பணத்தை செலுத்த முடியாத நிலையில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளனர்.

இது குறித்து கருத்து கூறிய அனைத்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, மஹபொல மற்றும் மாணவர் உதவிநிதி கொடுப்பனவுகள் தாமதமாவது சம்பந்தமாக பல்கலைக் கழக மானிய ஆணைக் குழு மற்றும் மஹபொல புலமைப் பரிசில் நம்பிக்கை நிதியத்தில் விசாரித்த போதிலும் சரியான பதில் கிடைக்கவில்லையெனக் கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி