சுற்றாடல் பாதிப்படையாத பிரதேசமான முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் 65,102 பர்சஸ் காணி ஒர பர்ச் 500 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பாராளுமன்ற பொது கணக்குகள் குழுவின் (கோபா) கவனத்திற்கு வந்துள்ளது.

கம்பஹா கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் இதனை கொள்வனவு செய்திருப்பதுடன், அதற்கு உதவியதாகக் கூறப்படும் அத்திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லையென தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரிப்பதற்காக கமத்தொழில் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் அரச கணக்குள் சம்பந்தமான பாராளுமன்ற குழுவிற்கு அழைக்கப்பட்டாலும் அவர் வரவில்லை.

இதற்கிடையே, சுற்றாடல் பாதிப்பற்ற முத்துராஜவெல நிலத்திற்குள் நுழைய எவருக்கும் அனுமமதியளிக்கக் கூடாதெனவும், அங்கு எந்தவிதமான கட்டடங்களும் கட்ட அனுமதிக்கக் கூடாதெனவும் சுற்றாடல் அமைச்சு உட்பட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு குழு பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையின் போது வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பெகோ இயந்திரம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்க கணக்குகள் சம்பந்தமா பாராளுமன்ற குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 6232 ஹெக்டயார் நிலத்தை கொண்ட முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் 3068 ஹெக்டயார் ஈரநிலப் பிரதேசமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஈரநிலப் பிரதேசம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் 2016.09.09 வெளியிடப்பட்டுள்ள வர்ததமானியின் மூம் அப்பிதேசத்தின் ஒரு பகுததி நகர அபிவிருத்த பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச கணக்குகள் சம்பந்தமாக பாராளுமன்றக் குழு கூறுகிறது.

என்றாலும் இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பெரும் சர்சை ஏற்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி