அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது.அசர்பைஜான் மற்றும் அதன் அண்டை நாடான அர்மீனியா இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது.

அந்த போரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான போர் ரஷியாவின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது.

போர் முடிவுக்கு வந்த போதும் அசர்பைஜான் - அர்மீனியா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இருநாட்டு பாதுகாப்பு படையினரும் எல்லையில் எதிர்தரப்பினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் இருநாட்டு வீரர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், நாக்ரோனா-கராபாக் பகுதியில் உள்ள எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே நேற்று திடீரென மோதல் வெடித்தது. அர்மீனிய மற்றும் அசர்பைஜான் ராணுவத்தினர் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இருநாட்டு வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், 7 பேர் அசர்பைஜான் வீரர்கள் எனவும், ஒருவர் அர்மீனிய வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோதலின் போது தங்கள் நாட்டு வீரர்கள் 24 பேர் காணவில்லை எனவும், 13 அசர்பைஜான் வீரர்களை பிடித்துவைத்துள்ளோம் எனவும் அர்மீனியா தெரிவித்துள்ளது.

அசர்பைஜான் - அர்மீனியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில் இந்த மோதல் இருநாடுகளுக்கு இடையே போரை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.    

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி