ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.

கனரக வாகனங்கள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ஆயுதங்களுடன் கூடிய இந்தச் சுற்றிவளைப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதனால், நாட்டில் நிலவும் பசளைப் பிரச்சினை அன்றைய தினத்திற்கு முன்னர் தீர்க்கப்படவில்லை என்றால் இந்தச் சுற்றிவளைப்பு நடக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளுடன் இணைந்து, ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளது என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி