தாங்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்து வருவதால்,போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.</p

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தி நவம்பர் 11ஆம் திகதி வியாழக்கிழமை புதுக்குடியிருப்பில் இருந்து பிரதேச சபை வரை பேரணியாகச் சென்றுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வினால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெற்று சிலின்டர்கள் ஏற்றப்பட்ட வண்டியை தள்ளியவாறு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

போராட்டத்தின் முடிவில் பிரதேச சபைத் தலைவரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்ததாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

tgyty

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று காலை புதுக்குடியிருப்பில் கடையடைப்புச் செய்யப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ரோஹன ராஜபக்ஷவினால் நவம்பர் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினருக்கு 10,000 ரூபா சம்பள உயர்வை வழங்கக் கோரி, தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபையின் தொழிற்சங்கங்கள் நாளை பிற்பகல் 1 மணி முதல் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.  

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி