உண்மையான தேசப்பற்றாளரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமானார்.

'சமரவீர அறக்கட்டளை' நவம்பர் 23-26 ஆகிய நான்கு நாட்களும் சமயச் சடங்குகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

 அதன்படி,

 நவ. 23 முழு நினைவு,சமயச் சடங்குகள்

வணக்கத்திற்குரிய பண்டித கல்கண்டே தம்மானந்த தேரர் மூன்று முழுமையான தம்ம சொற்பொழிவை ஆற்றுவார். இரவு 7 மணி முதல் 8.00 மணி வரை சமூக வலைத்தளங்களில் பிரசங்கம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துணை சங்க தக்ஷிணா சொற்பொழிவு: நவ. 24

பொது மரியாதைக்கான அஸ்தி: நவ. 25 கொழும்பில்

மறைந்த மங்கள சமரவீரவின் அஸ்தி நவம்பர் 25, 2021 காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு 08, பௌத்தலோக மாவத்தை, இல. 483, ஜயரத்ன மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

மாத்தறை மக்களின் அஞ்சலி: நவ. மாத்தறையில் 26

மாத்தறை மாவட்டத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய மங்கள சமரவீரவுக்கு மாத்தறை மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்பாட்டுக் குழு வழங்கியுள்ளது. அதன்படி, அவரது அஸ்தி 26 நவம்பர் 2021 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாத்தறை பழைய டச்சு சந்தை கட்டிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அஸ்தி மாலை 4.00 மணியளவில் மாத்தறை அனகாரிக தர்மபால மாவத்தை மற்றும் ஹக்மன வீதி வழியாக மாத்தறை  பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

நவம்பர் 25 மற்றும் 26, 2021 திகளில் நேரில் வரும் அனைவரும் கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறு 'சமரவீர அறக்கட்டளையின்' தலைவர் ஜெயந்தி சமரவீர குணவர்தன அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

Mathaka Mangala Final 01

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி