கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ஒரே நாடு, ஒரோ சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி புதிய விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி அந்த செயலணியானது இதற்கு பின்னர், இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை செயற்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மற்றும் மேற்படி கோட்பாட்டை ஆய்வு செய்ததன் பின்னர் அதற்கான இலங்கைக்கு பொருத்தமான கோட்பாட்டை தயாரிப்பதற்கான முன்மொழிவை மாத்திரமே சமர்ப்பிக்கும்.

இந்த ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியல் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நீதியமைச்சின் சட்ட வரைவுகளை பரிசீலித்தல் போன்ற அதிகாரங்கள் அதற்கு இருந்தன.

இந்த தீர்மானம் சம்பந்தமாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தனது எதிர்ப்பை தெரிவித்திருந்ததுடன் தனது அமைச்சுப் பதவியிலிருந்தும், பா.உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கூறி ஜனாதிபதியிடம் கடிதமொன்றை ஒப்படைத்திருந்தார். என்றாலும் அவரது ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே, ஆரம்பத்தில் வெளியிடட வர்த்தமானி அறிவித்தலை திருத்தி கடந்த 6ம் திகதியிட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த செயலணியில் உறுப்பினர்களாக செயற்பட்ட பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இன்திகாப் ஆகியோர் இந்த செயலணியிலிருந்து சமீபத்தில் விலகியுள்ளதாக செய்திகள் வந்தன.

இதன்படி, இந்த செயணிக்கு புதிதாக மூன்று பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார். ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி சத்குணராஜா, மற்றும் அய்யாம்பிள்ளை தயாநந்த ராஜா ஆகிய மூவருமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியால் புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலமே இந்த மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி