ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கு கடற்கரையை தனியாருக்கு விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இருந்த முத்துராஜவெல ஈரநில வலயத்திற்குட்பட்ட இந்தப் பகுதியும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சமகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது UDA யினால் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நீலசிறிகம, ஜனோதயகம உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பேலியகொட தொடக்கம் நீர்கொழும்பு கொச்சிக்கடை வரையான மேற்குக் கரையோரத்தில் தமது காணிகளையும் சொத்துக்களையும் இழக்கும் மக்கள் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் முத்துராஜாவெல ஈரநில நிலக் காப்பகத்திற்கும் அதன் வனவிலங்குகளுக்கும் கடுமையான சேதம் ஏற்படக் கூடும் என சுற்றாடல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஓரளவு பாதுகாக்கப்பட்டு வந்த முத்துராஜவெல வனவிலங்கு மற்றும் வனத் திணைக்களத்தை வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் இருந்து நீக்கி நகர அபிவிருத்தி அதிகார சபை கையகப்படுத்தியமைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"அருட்தந்தை சிறில் காமினியை CID க்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் அரசாங்கம் இப்போது கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மேற்கு கடற்கரையை விற்கிறது" என்று ஹரின் பெர்னாண்டோ கூறினார். இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறோம், "என்று குறிப்பிட்டார்.

வத்தளை, ஜா-எல, நீர்கொழும்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் அரசாங்கத்தின் திட்டத்தினால் காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்த மக்களின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் Capitals Metals நிறுவனத்திற்கு 2013 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று முதல் பொத்துவில் வரையிலான கிழக்குக் கடற்கரையில் சுரங்கத் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அப்பகுதி மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக வாபஸ் பெறப்பட்ட இத்திட்டம் அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி