இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் வந்து இணையும்படி இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உச்சிமாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி பேசிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், ‘நீங்கள் (நரேந்திரமோடி) இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்... வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்’ என்று கூறினார். இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி