சட்டம் என்ற பெயரில் அநேகமான காட்டு மிராண்டித் தனங்கள் அரங்கேறி வருவதாக மாற்று கொள்கைகளுக்காக கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

காணொளித் தொழில்நுட்பம் ஊடாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சட்டம் என்ற போர்வையில் அதிகார துஸ்பிரயோகங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேசிய மனித உரிமைப் ஆணைக்குழு என்பன அரசுக்கு சொந்தமானதே தவிர அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனங்கள் சுயாதீனமான அடிப்படையில் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவங்களை பார்த்திக்கின்றோம் எனவும் இந்த அனைத்து காட்டு மிராண்டித் தனங்களும் சட்டம் என்ற போர்வையில் மூடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தொடர்பான சம்பவமும் இவ்வாறான ஓன்று எனவும் சட்ட மீறல்களை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டங்களை உருவாக்குவதனை விடவும் சட்டங்களை அமுல்படுத்துவதற்காக அரசியல் அர்ப்பணிப்பும் விருப்பமும் மிகவும் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை விடவும் சட்டமற்ற நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி