1200 x 80 DMirror

 
 

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சண்டித்தனமான பேச்சுக்களால் என்னை பயமுறுத்த முடியாது என அத்துரலியே ரத்ன தேரர் அரச தலைவர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் நிதியமைச்சர் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்க யுகதனவி ஒப்பந்தம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க வாய்ப்பு கோரி 11 அரசாங்க பங்காளிகள் ஜனாதிபதியிடம் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஆரம்பமான இந்த கலந்துரையாடல் இரவு 10 மணிவரை நான்கரை மணித்தியாலங்கள் நீடித்த போதிலும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம். அதாவுல்லா, வீரசுமண வீரசிங்க, டிரான் அலஸ், கெவிது குமாரதுங்க, அசங்க நவரத்ன மற்றும் அரசாங்கத்தின் கூட்டு கட்சிகள் சார்பில் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் அதுரலிய ரத்ன தேரரும் கலந்துகொண்டார்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொக்குகே மற்றும் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரிய வசம் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தை (CWC) பிரதிநிதித்துவப்படுத்தும் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி 'பௌத்த சின்னம்'! என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து, இவ்வாறான ஆணைக்குழுவின் தலைவராக ஞானசார தேரரை நியமித்தமை தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க விளக்கமளித்துள்ளார். இது சிங்கள பௌத்த மக்களை அவமதிக்கும் செயலாக மகாசங்கத்தினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நியமனத்தை வழங்குவதற்கு அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதிக்கு அவ்வாறானதொரு நியமனத்தை வழங்குவதற்கு நாம் அனைவருக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனினும், அவர் பௌத்த தேரரை நியமிப்பது பொருத்தமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விடயத்தை ஆமோதித்த பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க, இந்த நியமனம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாத பாரிய குற்றமாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, ​​அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட, இந்த நியமனம் குறித்து தானும் விமர்சிப்பதாகவும், ஆனால் ஜனாதிபதிக்கு தான் விரும்பிய ஒருவரை நியமிக்கும் அதிகாரம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நியமனத்திற்கு அமைச்சர்கள் உட்பட பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அவ்வேளையில் மீண்டும் ஒரு சூடான சூழல் உருவாகியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரம் இருந்தாலும் இவ்வாறான நியமனத்தினால் ஜனாதிபதிக்கு மட்டுமன்றி முழு அரசாங்கமே பாதிக்கப்படும் என மைத்திரி கட்சிகளின் தலைவர்கள் ஏகமனதாக தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கருத்துக்களுக்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, ஜனாதிபதிக்கு 68 இலட்சம் பேரின் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் அரசாங்கத்தின் கூட்டாளிகளை கேவலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட போது எழுந்து நின்ற.அத்துரலியே ரத்தன தேரர், ஜே.ஆர். - பிரேமதாச காலத்தில் இருந்து ஐ.தே.க அரசாங்கங்களை பதவியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டங்களுக்கு தனது பங்களிப்பு என்ன என்பதை விளக்கிய ரத்ன தேரர் அமைச்சர் பசில் ராஜபக்சவின் கருத்துக்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்.

''இன்று இங்கு சத்தம் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அன்று ஐ.தே.க யில் இருந்தார்கள். காமினி திஸாநாயக்கவை எதிர்த்து அப்போது நாங்கள் மக்கள் பக்கம் அமர்ந்து போராடினோம் சிறை சென்றோம்.அதனால அந்த சத்தங்களுக்கு பயப்படுவோம்னு நினைக்காதீங்க.. ஆசனத்தை இழந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்.​கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அமெரிக்க ஒப்பந்தத்தை எதிர்த்து வீதியில் இறங்குவேன். எனவே, இவ்வாறான மிரட்டல்களை விடுத்து என்னை பயமுறுத்த வராதீர்கள்” என அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நீதியமைச்சருக்கு உதவுவதற்காக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“ஒரே நாடு ஒரே சட்டம் இதுவரை வெற்றிபெறவில்லை. அண்மையில் நான் அனுராதபுரத்திற்குச் சென்றிருந்தபோது, ​தேரர்களும் இவ்வாரான கதையை கூறினார்கள். அதற்காகவே கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி