2017ம் ஆண்டு மிகிந்தலை பிரதேசத்தில் ஒரு இளைஞனைக் கைது செய்து தேக்கு மரத்தில் தொங்க வைத்து மிருகத்தனமாக தாக்கிய் சம்பவத்தில் அவரது அடிப்படை உரிமைகளை மீறிய இரண்டு காவல் துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளை திருடியது சம்பந்தமமாக இளைஞரை கைது செய்ததன் பின்னர் அவரை மிருகத்தனமாகத் தாக்கிய காவல்துறை தலைமை காவல் அதிகாரி சிறிசேன பிரயதர்ஷன மற்றம் காவலர் டப்.எம். நிலன்த பிரியதர்ஷன ஆகியோருக்கு எதிராகவே உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

இளைஞரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வீதம் ரூ. பத்து லட்சத்தை தமது சொந்தப் பணத்திலிருந்து வழங்க வேண்டுமென தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், மேலதிகமாக ரூ.25000 வீதம் வழக்கு செலவாக அந்த இளைஞருக்கு வழங்க வேண்டுமெனவும் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தாக்குதல் சம்பந்தமாக குற்றவாளிகளாகக் காணப்பட்ட அனுராதபுரம் நடமாடும் குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய ஒரு தலைமக் காவலருக்கும், சாதாரண காவலருக்குமே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காளான இளைஞர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக அநுராதபுரம் குற்றவியல் விசாரணை பிரிவின் தலைமைக் காவலர் சிறிசேனகே பிரியதர்ஷன, காவலர் டப். எம். நிலன்த பிரியதர்ஷன உட்பட 12 பேர் பிரதிவாதகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

சட்டத்தை செயற்படுத்ல் மற்றும் சடம் ஒழுங்கை பாதுகாத்தல் ஆகிய கடமைகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மீது, இந்த உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல், மற்றும் முன்னெடுத்தலுக்காக உயர்ந்த பொறுப்பு சாட்டப்பட்டிப்பதாக உயர் நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதி செய்திருப்பதாக மேற்படி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி