சட்டங்களை தயாரிக்கும் பாராளுமன்றத்திற்கு தான் மொன்டிசோரியிலிருந்து வரவில்லை எனவும், வேறு இடத்தில் தயாரித்த சட்டத்தை முன்வைக்கும் போது சிக்னல் கம்பங்களைப் போல கை தூக்க தயாரில்லை எனவும் கல்வி மறுசீரமைப்பும் மற்றும் திறந்த பல்கலைக் கழக ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று (23) பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (கோப்) அறிக்கை சம்பந்தமான சபை ஒத்திவைக்கப்படும் வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவரது உரையின் ஒரு பகுதி,

வேறொரு இடத்தில் சட்டங்களைத் தயாரித்து இங்கு கொண்டுவந்து நாங்கள் கை தூக்க வேண்டுமென எதிர்ப்பார்க்க வேண்டாம். அப்படி செய்ய முடியாது. நான் சட்டத் துறைக்கான பட்டப்படிப்பை 1982ல் மேற்கொண்டேன். 1985ல் உயர் நீதிமன்றத்திற்கு வந்தேன். முதல் பத்து வருடங்களில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக ஆஜரானேன். பாராளுமன்றத்திற்கு குண்டெறிந்த வழக்கிலும் நான் பேசினேன். இது சிலபேருக்குத் தெரியாது. சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் மொன்டிசோரியில் படித்துவிட்டு வந்திருக்கிறோம் என்று. எங்கேயாவது தயாரிக்கும் சட்டங்கள் ஆலோசனைக் குழுவிற்கு கொண்டு வருகிறார்கள். இங்கு நாங்கள் கை தூக்க வேண்டும். மக்கள் எங்களை தெரிவு செய்தது சிக்னல் கம்பங்களை போன்று இருப்பதற்கல்ல என்பதையும் நான் கூறுகிறேன்.

இவற்றைக் கூற நாம் பயப்பட வேண்டியதில்லை. நாங்கள் பொது மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். பாராளுமன்றதில் நிதிக் கட்டுப்பாடு எங்கே. இன்று சிலருக்குத் தெரியாது அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிப்பது எப்படியென்று. கடந்த ஆட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்தார்கள். அங்கு நடைமுறை இருந்தது. பாராளுமன்றத்தில் முன்மொழிவொன்று நிறைவேற்றப்பட்டது. தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது. ஆறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுவிற்குத்தான் நிபுணர்களின்; தொழில்நுட்ப ஒத்துழைப்பு கிடைத்தது. இது சட்டவாக்கச் சபையா, நாம் ஏன் இங்கிருக்க வேண்டும். நான் கூட்டணியின் செயலாளராக இருந்துள்ளேன். தேசியப் பட்டியலில் ஒருபோதும் தெரிவு செய்யப்படவில்லை.”

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி