இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவரின் உடல் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீனவரின் உடலை வாங்கிய இந்திய கடலோர காவல் படையினர், நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான் மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயன்ற போது கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற தமிழக மீனவரின் படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது, என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.

அதில் மாயமான மீனவர் ராஜ்கிரணின் சடலத்தை இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின் இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவர் - திருமணமாகி 40 நாட்களே ஆனவர்

மீட்கப்பட்ட உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதராக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று காலை சுமார் 7 மணியாளவில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படை வீரர்களிடம் தூதரக அதிகாரிகளால் ஒப்படைக்கபட்டது.

மீனவர் ராஜ்கிரனின் உடலை இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று காலை சுமார் பத்து மணியளவில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடல் நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண்

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண்

துறைமுகம் வரும் உடலுக்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்திய பின் ராஜ்கிரண் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் நடுக்கடலில் படகு மூழ்கியதில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் வரும் 1ஆம் தேதி வரை யாழ்பாணத்தில் உள்ள முகாமில் தங்க வைக்க ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாயமான மீனவர் ராஜ்கிரன் உடல் மட்டுமே இன்று தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டம்

கடற்கரையில் கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள்.

கடற்கரையில் கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் நடுக்கடலில் உயிரிழந்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் வெள்ளிகிழமை மாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இந்திய கடற்படை வசமுள்ள இரண்டு இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்வதாக இலங்கை அரசு மீது குற்றம்சாட்டியும், இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வரும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டிப்பதுடன் படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கி அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களால் தங்கச்சிமடத்தில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மீனவர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் ஆர்பாட்டம் வாயிலாக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி