அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பெட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்கள் எடுத்துள்ளது.ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக இன்று நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில், நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பெட்டிங் செய்த இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹசரங்கா 71 ரன்கள் குவித்து அசத்தினார். அரைசதத்தை கடந்த நிஷாங்கா 61 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி