வெளிநாட்டில் பணியாற்றும் பெண்களுக்கான சட்டரீதியான நிபந்தனைகளை திருத்தி, இங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்களை தொடர்ந்தும் ஆபத்தில் தள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக ‘சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு’ கூறுகிறது.

இந்நாட்டு பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் போது நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை தளர்த்தும் முயற்சி சம்பந்தமாக, சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தேசியக் குழு உறுப்பினர் சித்தாரா குலரத்ன நேற்று (14) நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வு பெறுவதற்காக தமது இயக்கம் அடிக்கடி நடவடிக்கை எடுத்த போதிலும், அரசாங்கம் இதுவரை எந்த தீர்வையும் முன்வைக்கவில்லையெனவும், புதிய தளர்வுகளினால் பெண்கள் மாத்தி;ரமல்ல, அவர்களது பிள்ளைகள் உட்பட நெருக்கமானவர்களும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமெனவும் அவர் கூறினார்.

அவருடைய கருத்துக்களில் சில,

“பெண்கள் வெளிநாட்டுப் பணிக்கு செல்லும் போது நிறைவேற்ற வேண்டிய தகுதிகளில், 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் தாய்மார் பூர்த்தி செய்ய வேண்டியண. ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவாக, அத்தகைய தாய்மார்கள் தமது பிள்ளைகளின் பொறுப்பை எந்த உறவினரிடம் ஒப்படைப்பது என்பதும், அவர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதற்கு உள்ள திறன் சம்பந்தமாகவும் பரிசீலிக்கப்படும்.

இந்து முறையாக கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் நிர்ணயிக்கப்படுவதால், அரச நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண்களின் பிள்ளைகள் சம்பந்தமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேரிடும். ஆனால், வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண்களுக்கான விண்ணப்பங்களை புதிய தளர்வுகள் காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால்ள ஒன்லைன் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும். இதன்போது, பிள்ளைகள் தொடர்பிலான அரசாங்கத்தின் பொறுப்பு சம்பந்தமான நிபந்தனைகள் நீக்கப்பட்டு சத்தியப் பிரமாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டுப் பணிக்கு செல்லும் பெண்களின் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த பல்வேறு நிபந்தனைகளுடன் வெளிநாட்டுப் பணிக்குச் சென்ற பெண்களின் பிள்ளைகள் கூட ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளமையால், இந்த குறைந்தபட்ச நிபந்தனையையும் இல்லாமலாக்கினால் நிலை எப்படி இருக்கும் என்பதை எம்மால் உணர முடியும்’’

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி