Tamil Leader News
முக்கியம்
17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●
செய்திகள்

தேர்தல் மாவட்டங்களை 40 வரை அதிகரிக்க பஃவ்ரல் அமைப்பு யோசனை!

T

The Leader Desk

ஜூலை 16, 2021 • 9:47 AM

தேர்தல் மாவட்டங்களை 40 வரை அதிகரிக்க பஃவ்ரல் அமைப்பு  யோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (15) கூடியது.
  • பூகோள விடயங்கள், சனத்தொகை மற்றும் ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டே தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிக்குமாறு யோசனையை முன்வைத்துள்ளதாக, அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
  • “முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறையின் (Advance Voting System) தேவையை தெளிவுபடுத்திய பஃவ்ரல் அமைப்பு அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குரிமையை வழங்குவது அத்தியாவசியமானது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (15) கூடியது.

இதன்போதே பஃவ்ரல் அமைப்பு, மேற்கண்டவாறு யோசனைகளை முன்வைத்துள்ளது. பூகோள விடயங்கள், சனத்தொகை மற்றும் ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டே தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிக்குமாறு யோசனையை முன்வைத்துள்ளதாக, அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

“முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறையின் (Advance Voting System) தேவையை தெளிவுபடுத்திய பஃவ்ரல் அமைப்பு அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குரிமையை வழங்குவது அத்தியாவசியமானது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

வேட்பாளர்களின் செலவீனங்களை வரையறுத்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை ஒரே தினத்தில் நடத்துதல், தேர்தல் நாட்காட்டியொன்றைசெயற்படுத்துதல், தேர்தல் முறைமையில் மற்றும் தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைகளை கண்டறிந்து அவற்றை புதுப்பித்தல், அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுத்தல், தண்டப்பணம் மற்றும் தேர்தல் சட்டத்தை புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பிலும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.

இதேவேளை, அனைத்து வாக்காளர்களும் நியாயமான வகையில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துதல், பிரச்சாரங்கள் தொடர்பான

சட்டங்கள் உள்ளிட்ட போதுமான அளவு பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளது.

வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பிரகடனப்படுத்துதல்,தேசியப்பட்டியல் முறையின் ஊடாக வேட்பாளர்களை தெரிவு செய்தல், தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை பாதுகாத்தல் மற்றும் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் முறைமை தொடர்பிலும் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீண்ட நேரம் குழுவில் கருத்துத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவது சாத்தியமில்லை” என இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் பிரசார செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக துரிதமாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...