Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

செனல் -4 காணொளி தொடர்பான விசாரணை சிஐடியின் கீழ்; பிள்ளையானுக்கு அழைப்பு!

T

The Leader Desk

நவம்பர் 12, 2024 • 6:02 AM

செனல் -4 காணொளி தொடர்பான விசாரணை சிஐடியின் கீழ்; பிள்ளையானுக்கு அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  • பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4, ஆசாத் மௌலானா என்ற இலங்கையரான மொஹமட் மிஹிலால் மொஹமட் ஹப்சிருடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது.
  • இந்த நேர்காணல் செப்டம்பர் 6, 2023 அன்று அல்லது அதற்கு அண்மித்த தினம் ஒன்றில் செனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டது, பின்னர் அந்த வீடியோ அகற்றப்பட்டது.
  • இந்த விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (11) கோட்டை நீதிவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்தது.
எழுத்து அளவு:

தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளி அமைப்பு ஒன்றினால் காணொளி தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4, ஆசாத் மௌலானா என்ற இலங்கையரான மொஹமட் மிஹிலால் மொஹமட் ஹப்சிருடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது.
 
இந்த நேர்காணல் செப்டம்பர் 6, 2023 அன்று அல்லது அதற்கு அண்மித்த தினம் ஒன்றில் செனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டது, பின்னர் அந்த வீடியோ அகற்றப்பட்டது.
 
எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வீடியோவில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் மற்றும் குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சதி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
இந்த விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (11) கோட்டை நீதிவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்தது.
 
இதேவேளை, நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...