Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

போலி இலக்கத்தகடு கொண்ட, 4 கோடி ரூபா பெறுமதியான இந்த ஜீப் யாருடையது தெரியுமா?

T

The Leader Desk

நவம்பர் 3, 2024 • 4:21 AM

போலி இலக்கத்தகடு கொண்ட, 4 கோடி ரூபா பெறுமதியான இந்த ஜீப் யாருடையது தெரியுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெறுமதியானதும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டதுமான மிட்சுபிஷி ஜீப் ஒன்று தெல்தெனிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • கடந்த (31) திகன ஐ.சி.சி வீட்டுத் தொகுதிக்கு சொந்தமான வீடொன்றில் இந்தக் ஜீப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஜீப் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
  • அந்த ஜீப்பின் இலக்கத்தை பயன்படுத்தி இந்த ஜீப் பயன்படுத்தப்பட்டுள்ளதா பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
  • கடந்த 26ஆம் திகதி மிரிஹான பொலிஸ் பிரிவில் அம்குதெனிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றின் கராஜில் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்குச் சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் அவர் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

பெறுமதியானதும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டதுமான மிட்சுபிஷி ஜீப் ஒன்று தெல்தெனிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த  (31) திகன ஐ.சி.சி வீட்டுத் தொகுதிக்கு சொந்தமான வீடொன்றில் இந்தக் ஜீப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
இந்த ஜீப் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
 
ஆளில்லாத வீடொன்றின் காராஜில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஜீப்பின் இலக்கத் தகடு தொடர்பான விசாரணையில், அது கண்டி பிலவல பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு சொந்தமான சிவப்பு நிற பிராடோ ரக ஜீப்புக்குரியது என தெரிய வந்துள்ளது.
 
அந்த ஜீப்பின் இலக்கத்தை பயன்படுத்தி இந்த ஜீப் பயன்படுத்தப்பட்டுள்ளதா பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
திகன பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போலி இலக்கத் தகடுகள் கொண்ட இந்த ஜீப் வண்டி தொடர்பான சட்ட ரீதியான அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
 
கடந்த 26ஆம் திகதி மிரிஹான பொலிஸ் பிரிவில் அம்குதெனிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றின் கராஜில் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்குச் சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் அவர் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல் நிலை காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நுகேகொட பதில் நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...