Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நவம்பர் 4 இல் விசாரணை!

T

The Leader Desk

அக்டோபர் 24, 2024 • 2:11 PM

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நவம்பர் 4 இல் விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நவம்பர் 4ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இந்த மனு இன்று (24) உயர் நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
  • ஆட்சேபனை இருப்பின் நவம்பர் 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
எழுத்து அளவு:

தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள  மனுவை நவம்பர் 4ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு இன்று (24) உயர் நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
 
ஆட்சேபனை இருப்பின் நவம்பர் 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
 
சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் இலங்கை தேசிய அமைப்பின்" அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி அக்டோபர் 4 முதல் அக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் கூறுகிறார். 
 
தேர்தல்கள் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாத மற்றும் ஏழு வாரங்களுக்கு அதிகமில்லாத காலப்பகுதிக்குள் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடைந்த அக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும் ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டபூர்வ காலத்திற்குள் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...